நீர்வேளாண்மை உற்பத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என உறுதிப்பபடுத்தபடுமானால் அனைத்தும் செயற்பாடுகளும் நிறுத்தப்படும் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022


………
கடலட்டை, பாசி வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை உற்பத்திகளை விருத்தி செய்வதன் மூலம், எமது கடற்றொழில் சார் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளும் இல்லை – கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றது என்பது உறுதிப்பபடுத்தபடுமானால் அவை தொடர்பான அனைத்தும் செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவது மாத்திரமே தன்னுடைய நோக்கம் எனவும் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்தல், மண்ணெண்ணை தாராளமாக கிடைப்பதை உறுதிப்படுத்தல், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சமாந்தரமாக கிராமியக் கடற்றொழில் சங்கத்தினை வலுப்படுத்தல் மற்றும் நீர்வேளாண்மையை விருத்தி செய்து கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். – 27.09.2022

Related posts:

வீணைச் சின்னத்தின் வெற்றியை உறுதிசெய்ய ஒன்றுபட்டு உழைப்போம் - வேட்பாளர்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்த...
கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் ...
மணலை அகழ்வு தொடர்பில் மீண்டும் விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் ...