ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 12

Saturday, April 2nd, 2016

1975 – 1976 கால கட்டங்களில் தங்களை ஒடுக்குவதற்கான சூழ்ச்சிகள் ஆங்காங்கு இடம்பெற்றுவந்த காரணத்தினால்தமிழ் இளைஞர்கள் இயக்க வடிவம் பெற ஆரம்பிக்கின்றனர்!

1977ம் வருடம் ஜூலை மாதம் 21ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  7 ஆசனங்களை மாத்திரமே பெற்றுபடு தோல்வியடைகிறது!

ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கியத்தேசியக் கட்சி 140 ஆசனங்களைப் பெற்று நாடாளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மை பலத்தைக் கொண்டு ஆட்சிபீடமேறுகிறது!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 18 ஆசனங்களைப் பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணி – இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக தமிழர் ஒருவரை  எதிர்க்கட்சித் தலைவராக்கிய பெருமையைக் கொள்கிறது!

தமிழர் விடுதலைக் கூட்டணியானது தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து – இத் தேர்தலை ‘தமிழ் மக்களிடமிருந்து தமிழ் ஈழத்திற்கான ஆணையைப் பெறுவதற்கான தேர்தலாக’ அறிவித்தது!

இந்த நிலையில் -இந்தத் தேர்தலில்தமிழர் விடுதலைக் கூட்டணி தோற்றால்தமிழ் மக்கள் தமிழீழத்தை ஏற்கவில்லை
என்று அர்த்தமாகிவிடும்!

எனவே- தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரானவர்கள்கூட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே ஆதரவாகச் செயற்பட வேண்டிய நிலைஏற்பட்டது!

ஈழ விடுதலை இயக்கத்தில் செயற்பட்ட சி. புஸ்பராஜா இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் –

‘தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் எமக்குமுள்ள முரண்பாடுகள் கொள்கை,வேலைத் திட்டம், போராட்ட வழி சம்பந்தமானதே தவிர, அவர்கள் எமது தனிப்பட்ட எதிரிகளல்ல.

1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணியின் மேடைகளில் அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்தாலும் எமது கொள்கையின் அடிப்படையில் தெளிவாகவே பிரச்சாரம் செய்தோம்!

மாவிட்டபுரத்தில் நடந்த கூட்டத்தில் அமிர்தலிங்கத்திற்கு முன்வைத்தும் – வவுனியாவில் நடந்த கூட்டத்தில் தொண்டமானுக்கு முன்வைத்தும் – ‘நீங்கள் தமிழ் ஈழப் போராட்டத்தில் இருந்து  பின்வாங்கினால் இளைஞர்களுடைய துப்பாக்கிகள்  உங்களை நோக்கித் திரும்பத் தயங்காது’ எனக் கூறினேன்!

இத் தேர்தலில் சில மேடைகளில்  மிகையுணர்ச்சி அடிப்படையில் நான் பேசிய பேச்சுக்களை நினைத்து  இப்போது வெட்கமடைகிறேன்!

இந்நாட்களில் என்னிடம் நிறைவான பக்குவம் ஏற்படவில்லை என்பதை  இன்று உணரக் கூடியதாக இருக்கிறது!’ என சி. புஸ்பராஜா தனது  ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’எனும் நூலில் தெரிவித்துள்ளார்.

(தொடரும்)

Related posts: