ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 6 – ஈழ நாடன்

Monday, March 7th, 2016

திருவாளர் கே. சி. நித்தியானந்தா அவர்களைப் பற்றி
சி. புஸ்பராஜா அவர்கள்
தனது ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்”
எனும் நூலில் பின்வருமாறு
பதிவு செய்துள்ளார் –

‘இலங்கையின் அதி தீவிர முற்போக்கு எண்ணங்கொண்ட
தொழிற்சங்கவாதிகளில்
கே. சி. நித்தியானந்தாவும் ஒருவர்.
அன்றைய முற்போக்குத்
தொழிற்சங்கவாதிகளாக
இலங்கையில் விளங்கிய
டி. ஏ. சி. செனவிரத்ன, திசாநாயக்க, கந்தசாமி,
ஐ. நா. புகழ் வைகுந்தவாசன்,
ஏ. ஆர். ஆசிர்வாதம், எஸ் டி. பண்டாரநாயக்க,
திருமதி தமரா இலங்கரத்ன, பிலிப் குணவர்தன,
ரி. பி. இலங்கரத்ன போன்றவர்களுடன்
மிகவும் நெருக்கமாக
தொழிற்சங்க வேலைகள் செய்தவர்
கே. சி. நித்தியானந்தா.

இவர் லங்கா சமசமாஜக் கட்சியின்
ஓர் அங்கமான அரசாங்க எழுதுவினைஞர்
சேவை நலச் சங்கத்தை
ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவர்!

அவர் எப்பொழுதும் வெள்ளை வேட்டி,
தேசிய சட்டையுடனேயே காணப்படுவார்.
1930களிலேயே இந்த வேட்டி, சட்டையுடன்
கொழும்பு அலுவலகத்துக்கு
வேலைக்குப் போய் பலரின்
பாராட்டைப் பெற்றவர்!
அவரை நினைத்தால் வெள்ளையுடை
உடனேயே ஞாபகத்திற்கு வரும்!

1954ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட
வரவு – செலவுத் திட்டத்தை
கடுமையாக விமர்சித்ததால்
பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

பதவி நீக்கப்பட்ட இவருக்கு ஆதரவாகப்
பல தொழிற்சங்கங்கள் எழுப்பிய குரலுக்குப்
பயந்த அரசாங்கம் ஆறு மாதங்களின் பின்
இவரை மீண்டும் சேவையில் சேர்த்துக் கொண்டது!

கே. சி. நித்தியானந்தா இல்லாவிட்டால்
ஆரம்பத்தில் ரி. பி. இலங்கரத்ன, பீட்டர் கெனமன்
போன்றவர்கள் மிகச் சுலபமாகத்
தேர்தல் வெற்றியைக் கண்டிருக்க முடியாது
என கே. சி.யுடன் ஆரம்பம் முதல்
தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்ட
கே. வைகுந்தவாசன் என்னிடம் கூறினார்.

1977ம் ஆண்டு இலங்கையில்
தமிழர்களுக்கு எதிராக ஏற்பட்ட
இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு அகதிகளான
தமிழர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட
தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின்
ஆரம்பகர்த்தாவாகவும், செயலாளராகவும் இருந்து
மாபெரும் பணியை ஆற்றியவர் கே. சி. நித்தியானந்தா!”
(‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” – சி. புஸ்பராஜா –
பக்கம் – 272)

(தொடரும்)

Related posts: