ஐ.எஸ். தலைவர் படுகொலை – இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை!

Wednesday, October 30th, 2019


ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி அண்மையில் கொல்லப்பட்டதை அடுத்து இலங்கைக்கு புதிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட பின்னர் குறித்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கிடையில் பரபரப்பான ஒரு நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவரை பின்பற்றுபவர்களால் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில், இலங்கைக்கும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து இலங்கைக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிவப்பு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், காவல்துறை, இராணுவம் மற்றும் பிற புலனாய்வு பிரிவுகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை அரசியல் மிக முக்கியமான ஒரு தருணத்தில் இருப்பதனால் எந்தவகையிலாவது ஆபத்து நிகழ்ந்தால் அது ஒரு அரசியல் குழப்பமாக இருக்கும் என்பதால் நாட்டின் பாதுகாப்பு குறித்து உன்னிப்பாக கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: