விரைவில் உள்ளூராட்சித் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்!

Saturday, October 14th, 2017

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்தச் சட்டங்கள் தொடர்பில் தடையாகவிருந்த தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தவுடன் தாமதமின்றி தேர்தலுக்கான திகதியை அறிவிப்புச் செய்யமுடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுடன் தொடர்புடைய மாநகரசபை, நகரசபை, பிரதேசசபை ஆகியவற்றுக்கான தேர்தல் திருத்தச் சட்டங்களில் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றுக் கைச்சாத்திட்டார். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

விரைவில் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பைசர் இதன்போது குறிப்பிட்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவை இன்றைய தினம் சந்தித்துப் பேச்சு நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே தேர்தல் திகதியை விரைவில் அறிவிப்புச் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Related posts: