மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் – புதுப்பிக்கக்கூடிய வலு சக்தி அமைச்சு

Friday, July 28th, 2017

நீர் ஏந்து பிரதேசங்களில் பொதியளவு மழைபெய்யாததினால் மின் உற்பத்திக்கான நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. இதனால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலு சக்தி அமைச்சு மக்களை கேட்டுள்ளது.

தொடர்ச்சியான மின்விநியோகத்திற்காக மக்களின் ஒத்துழைப்புகள் தேவை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தப்படும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில் கூடுதலான மின்சாரத்தை விரயமாக்கும் உபகரணங்களை குறைந்தளவில் பயன்படுத்துமாறு அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts: