போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு – நீதி அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Wednesday, August 25th, 2021

தடுப்பு ஊசி ஏற்றும் விடயத்தில் முஸ்லிம் சமூகமும் ஆர்வம் செலுத்தி வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதுவித விஞ்ஞான அடிப்படையும் இன்றி போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் ,இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களில் 63 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.

இது நாட்டில் கொவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கை மக்களே தங்கள் தலைவிதியை தீர்மானிக்கட்டும்: இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்!
குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை - மக்கள் குழப்பமடைய தேவையில்லை ...
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை எந்தவொரு வெளிநாட்டு கடனையும் செலுத்தாமல் இருந்ததில்லை - அமைச்சர் ...