சிறுவர்கள் வாழக்கூடிய சிறப்பான நாடுகள் பட்டியலில் இலங்கை!

Friday, June 1st, 2018

தெற்காசிய பிராந்தியத்தில் சிறுவர்கள் வாழக்கூடிய சிறப்பான நாடுகள் பட்டியலில் இலங்கை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலக அளவில் இலங்கை 60 ஆவது இடத்தில் உள்ளதாக அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சேவ் த சில்ரன் அமைப்பு தொகுத்த பட்டியலில், பிராந்தியத்தின் ஏனைய நாடுகளை விட இலங்கை சிறப்பான நிலையில் இருக்கிறது. இந்தியா 113 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 130 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 149 ஆவது இடத்திலும் உள்ளன. இளம் பராய திருமணம்,வளரிளம் பருவ கர்ப்பம், சிறுவர் மரண வீதம் முதலான காரணிகளின் அடிப்படையில் பட்டியல் தொகுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறேனும் இலங்கையில் வாழும் ஐந்து வயத்திற்கு உட்பட்ட பிள்ளைகளில் 17 சதவீதமானோர் வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். தொழிலுக்காக வெளிநாடு செல்லும் பெற்றோரின் பிள்ளைகள் மிகவும் ஓரங்கட்டப்பட்ட குழுவாக மாறியுள்ளார்கள் எனவும் சேவ் த சில்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: