கடும் மழை : இன்றும் சில நாட்கள் தொடரும் என்கிறது வானிலை மையம்!

தற்போது நிலவுகின்ற சீரற்றக் காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும், மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு !
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தள்ள...
போலி தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க புதிய சட்டம் - நீதி அமைச்சர்!
|
|