ஒன்பது இலட்சம் மக்கள் வறட்சியால் பாதிப்பு!

Saturday, June 24th, 2017

இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

தற்போதைய வறட்சி நிலை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பு மற்றும் உலக உணவு திட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

வறட்சியால் பாதிப்படைந்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்குறிப்பாக இரண்டு லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குடி நீர் மற்றும் உணவு போன்ற தேவைகளை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

Related posts: