ஒக்ரோபர் முதல் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை!

Monday, August 14th, 2017

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகிப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணாதிலக்க தெரிவிக்கையில், உத்தேச புதிய இலத்திரனியல் அடையாள அட்டையில் உயிரியியல் தொடர்பான தரவுகள், விரல் அடையாளம் உட்பட சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும். முதற்கட்டத்தின் கீழ் ஒக்டோபர் மாதத்திலிருந்து புதிதாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.  எதிர்வரும் 22ஆம் திகதி இந்த யோசனை அடங்கிய சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அடையாள அட்டைக்காக புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் அடையாள அட்டை விபரங்களை மாற்றுவதற்கு விரும்புவோர் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஏனைய அனைத்து பிரஜைகளுக்கும் புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென 16 மில்லியன் பிரஜைகளின் பெயர் பட்டியல் ஒன்று ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணாதிலக்க மேலும் தோவித்தார். புதிய தேசிய அடையாள அட்டை தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: