233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு மிகப் பெரிய கெளரவம்!

Saturday, August 17th, 2019

ரஷ்யாவில் 233 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கும் மிக உயரிய விருது வழங்கப்படும் என்று ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.

தலைநகர் மாஸ்கோவின் ஜுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 233 பேருடன் நேற்று காலை 06.30 மணிக்கு புறப்பட்ட Ural Airlines நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இறக்கை மீது பறவை ஒன்று மோதியதால் இரண்டு இன்ஜின்களில் தீப்பற்றியது.

இதனால் விமானத்தை தொடர்ந்து இயக்கினால், மிகப் பெரிய விபத்து ஏற்படலாம், பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணி, உடனடியாக விமானத்தின் தலைமை விமானி Damir Yusupov(41), அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் அருகில் இருக்கும் விமானநிலையத்தைப் பற்றி கூறிய போது, அந்தளவிற்கு விமானத்த்தை இயக்க முடியாது என்பதால், விமானிகளான Damir Yusupov-Georgy Murzin(23) ஆகியோர் உடனடியாக தரையிரக்க முடிவு செய்துள்ளனர்.

அதன் படி அங்கிருந்த சோளக்கருது காட்டில் விமானத்தை தரையிரக்கினர். இதனால் சிலருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. மற்றபடி 233 பயணிகளும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.

இதனால் சாதுர்யமாக செயல்பட்டு, மிகப் பெரிய விபத்திலிருந்து காப்பாற்றிய பயணிகளான Damir Yusupov மற்றும் Georgy Murzin-வுக்கு ஹீரோ ஆப் ரஷ்யா என்ற விருதும், விமான ஊழியர்களான Nadezhda Vershinina(24), Aliya Slyakaeva(27), Yana Yagodina(26) மற்றும் Dmitry Ivlitsky(31) ஆகியோருக்கு தைரியத்திற்கான Order of Courage என்ற விருதும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.

Related posts: