23 வாகனங்கள் தொடர்ந்து மோதி கோர விபத்து – 05 பேர் உயிரிழப்பு!

Monday, February 11th, 2019

சீனாவின் கிழக்கு பகுதியில் 23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்திலும் மற்றொரு சாலை விபத்திலும் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்றாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல், குயிஸோவ் மாகாணத்தின் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு மினி பஸ் காரின் மீது மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: