விமானங்களை திருடி ஓட்டிப்பார்த்த 13 வயது சிறுவன்!

Monday, July 22nd, 2019

சீனாவில் இரண்டு சிறிய ரக விமானங்களை 13 வயதே ஆன சிறுவன் திருடி ஓட்டிப் பார்த்த காட்சிகள் வெளியாகியதையடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் கடந்த திங்களன்று நள்ளிரவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவனின் இந்த சாகச காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

ஷீ ரே ரக விமானத்துக்குள் ஏறி ஓட்டிப் பார்த்துள்ளதுடன், விமானம் சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கட்டிடத்தில் மோதியுள்ளது.

சிறுவன் பயன்படுத்தி மோதிய விமானத்தின் சேத மதிப்பு 8 ஆயிரம் யுவான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 வயதே ஆனாலும் பயிற்சி இன்றி 2 மணி நேரம் கவனித்ததை மட்டும் வைத்து விமானத்தை இயக்கிய சிறுவனை, விமான கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Related posts: