வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்களை ஜப்பான் அழிக்கும்  – ட்ரம்ப்

Wednesday, November 8th, 2017

அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட இராணுவ தளபாடங்களின் உதவியுடன், வடகொரியாவினால் மேற்கொள்ளப்படும்  ஏவுகணை தாக்குதல்களை ஜப்பான் அழிக்கும் தகமையைக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகளுக்கான பயணத்தின் முதல் நாடான ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்த அமெரிக்க ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயுடன் இணைந்து ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய போதே இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஜப்பானிய பிரதமர், ஏவுகணை தாக்குதலை இடைநிறுத்த வேண்டிய சந்தர்ப்பத்தில் ஜப்பான் நிச்சயமாக எதிர்கொள்ளும் என தெரிவித்தார் இது தவிர, மேலும் பல இராணுவ தளபாடங்களை அமெரிக்காவிடம் இருந்து ஜப்பான் வாங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Related posts: