நாளை நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவால் பாதகாப்பு அதிகரிப்பு!

Sunday, August 14th, 2016

சுதந்திர தினத்தையொட்டி சென்னை சென்ரல் ரலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிடும் காட்சி.

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்ரல்-எழும்பூர் ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பின்னரே, பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

சுதந்திர தினவிழா இந்திய சுதந்திர தினவிழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு நேற்று முதல் போடப்பட்டுள்ளது. சென்டிரல் ரெயில் நிலையம் முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடம், பார்சல்கள் வைக்கும் இடம், பயணிகள் பயன்படுத்தும் கழிவறைகள், பிளாட்பாரங்கள், பயணிகள் தங்கும் அறை ஆகியவற்றை தீவிர சோதனை செய்தனர்.

மோப்பநாய் உதவியுடன் சோதனை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்து பின்னர், அங்கிருந்து வடமாநிலங்களுக்கு புறப்படும் ரெயில்களில் மோப்ப நாய் உதவியுடனும், ‘மெட்டல் டிடெக்டர்’ கருவியுடனும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்கின்றனர்.

மேலும், சென்டிரல் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நுழைவுவாயில் பகுதியில் ‘ஸ்கேனர்’ கருவி மூலம், பயணிகள் கொண்டு வரும் பொருட்களை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர்.

ரெயில் நிலையத்தில் பயணிகள் கூடும் பகுதியில் உயர் கோபுரம் அமைத்து ‘பைனாகுலர்’ மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.எழும்பூர் ரெயில் நிலையம் சென்டிரல் ரெயில் நிலையத்தை போன்று, எழும்பூர் ரெயில் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் தாம்பரம், குரோம்பேட்டை, மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் கூறும்போது, ‘இன்று (நேற்று) முதல் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை இந்த 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதில் நாங்கள் முழுகவனம் செலுத்தி வருகிறோம். பயணிகளும் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். பயணிகள் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரையாவது கண்டால், உடனே ரெயில்வே பாதுகாப்பு படை உதவி எண்ணுக்கும்(90031-61710), ரெயில்வே போலீஸ் உதவி எண்ணுக்கும்(99625-00500) தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

Related posts: