யார் என்பதல்ல எப்படிப்பட்டவர் என்பது தான் பிரதானமானது –  விளாடிமிர் புடின்!

Monday, June 20th, 2016

அமெரிக்க அதிபர் பதவிக்கு யார் வந்தாலும் ரஷ்யா ஒத்துழைக்க தயாராக இருப்பதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடந்த முக்கிய கருத்தரங்குக் கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர், இத்தாலி பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிபர் புடின், அமெரிக்க நாட்டுக்கு யார் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவருடன் ரஷியா ஒத்துழைக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் –

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது தான் ரஷ்யாவுக்கு முக்கியம். அவர் சர்வதேச விவகாரங்களில் சரியாகச் செயல்படுவது அவசியம். அதேபோல் பொருளாதார விவகாரங்களில் ரஷ்யாவுடன் இணக்கமாக நடந்து கொள்கிறாரா, சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களில் அவர் சரியான கொள்கை முடிவுகள் எடுக்கிறாரா என்பது போன்றவை முக்கியமானவை என்று கூறியுள்ளார்.

Related posts: