ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷிக்கு ஹரியானா ரூ.3 கோடி பரிசு அறிவிப்பு!

Thursday, August 18th, 2016

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றத்தந்துள்ள சாக்ஷி மாலிக்கிற்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.

சாக்ஷிக்கு அவர் சார்ந்துள்ள ஹரியானா மாநில அரசு ரூ.3 கோடி பரிசு அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ரூ.30 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாக்ஷியின் சாதனையால் தேசமே பெருமை கொண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் பிரணாப் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதே போல பிரதமர் மோடியும் தனது டுவிட்டர் பதிவில் சாக்ஷியை இந்தியாவின் மகள் என வர்ணித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாக்ஷி மாலிக்கிற்கு 23 வயதாகிறது. ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் சாக்ஷியை வாழ்த்தியுள்ளார்.

சாக்ஷிக்கு விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர். கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் சுஷில் குமார், முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் வாழ்த்து கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதே போன்று சாக்ஷிக்கு பரிசுகளும் குவிந்து வருகின்றன. சாக்ஷி பிறந்த மாநிலமான ஹரியானா மாநில அரசு உடனடியாக ரூ.3 கோடி பரிசு அறிவித்து சாக்ஷியை கௌரவப்படுத்தியுள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ரூ.30 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையும் ஒலிம்பிக்கில் வெண்கலம் வெல்பவர்களுக்கு ரூ. 50 லட்சம் பரிசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: