மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரினை வென்றது நியூசிலாந்து அணி!

Wednesday, December 27th, 2017

நியூசிலாந்து கிறிஸ் சேர்ச் நடைபெற்று முடிந்த 3ஆவது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, மேற்கிந்திய அணியை 66 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது.

மேற்கிந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் டெஸ்ட் தொடரை 3:0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3:0 ரீதியிலும் தற்போது தோல்வியடைந்துள்ளது.

இதனடிப்படையில் 3 ஆவது போட்டியில் நாணயற் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட, 3 ஓவர்கள் முடிவில் மழை குறிக்கிட்டதால் 4 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் ரெய்லர் 47 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இதன்படி மழை குறிக்கிட்டதால் டக்வோர்த் லீவிஸ் முறையில் 23 ஓவர்களில் 166 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலைக்கு மேற்கிந்திய அணி தள்ளப்பட்டது.

மேற்கிந்திய அணி குறித்த 23 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்றுள்ளது. மேற்கிந்திய அணி சார்பில் கோல்டர் 34 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார்.

இதனால் இப்போட்டியில் டக்வோர்த் லீவிஸ் முறையில் நியூசிலாந்து அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

Related posts: