வடகொரியத் தலைவருடன் வெளிப்படையான பேச்சு – ட்ரம்ப் !
Saturday, June 29th, 2019
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அன்னுடன் வெளிப்படையான சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நேற்றும் இன்றும் இடம்பெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜி-20 மாநாட்டை நிறைவு செய்து தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் வழியில், வட மற்றும் தென்கொரிய எல்லையின் இராணுவமயமற்ற பகுதியில் கிம் ஜோங் அன்னை சந்திப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
பிரான்சில் பொது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்தவர் சுட்டுக்கொலை!
காபுல் தற்கொலை குண்டு தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு!
|
|
|


