மெக்ஸிகோவில் சீற்றத்தக்குள்ளான எரிமலை!

Wednesday, August 31st, 2016

மெக்ஸிகோவில் கொலிமா எரிமலை சீற்றத்துக்குள்ளாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எரிமலையானது 2 ஆயிரத்து 400 மீற்றர்கள் வரையான பகுதிகளுக்கு எரிமலை சாம்பல் மற்றும் புகையை கக்கியுள்ளது.

இதனால் நீல வானம் முழுவதும் கருமேகம் நிரம்பி காணப்படுகிறது. மேலும் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 10 மணி 19 நமிடத்திற்கு எரிமலை சீற்றமடைய ஆரம்பித்துள்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான எரிமலைகள் காணப்படுகிறது. இவற்றில் 14 எரிமலைகள் தற்போது வெடித்து சிதறுவதற்காக காத்திருக்கின்றன.

எனினும் குறித்த கொலிமா எரிமலையானது கடந்த 1986 ஆம் ஆண்டு கடும் சீற்றத்துக்குள்ளாகி வெடித்தது என்பது குகறிப்பிடத்தக்கது.

மெக்ஸிகன் வரலாற்றில் இதுவரை பதிவாகிய எரிமலை வெடிப்புகளுக்குள் கடந்த 1953 ஆம் ஆண்டு மிச்சோகனிலுள்ள பரிகுட்டின் எரிமலை மற்றும் 1986 ஆம் ஆண்டு சியாபேஸிலுள்ள தகானா எரிமலை வெடிப்புகள் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய எரிமலை வெடிப்புகளாக பதிவாகியுள்ளது.

download

Related posts: