மசூதி மீது தீவிரவாதிகள் தாக்குதல்: எகிப்தில் 235 பேர் பலி!

Saturday, November 25th, 2017

எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 235 பேர் பலியாகியுள்ளனர்.

மசூதியில் பிரார்த்தனைக்காக கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் இதன்போது காயங்களுக்குள்ளாகினர். வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே இன்று வாகனத்தில் சென்ற 4 தீவிரவாதிகள் சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.

மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களைக் குறிவைத்து சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Related posts: