போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் – ஆப்கானிஸ்தான் அதிபர்!

Sunday, July 1st, 2018

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ள தலிபான் அரசை கவிழ்க்க போராடி வருகிறது. இதனால் அரசுக்கு எதிராக போட்டி அரசு ஒன்றையும் நடத்தி வருகிறது.

தலிபான் அமைப்பை கட்டுப்படுத்த அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசும் பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. இருதரப்பிலும் போரால் பல உயிர்கள் பலியாகின்றன.

இதற்கிடையே கடந்த மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் கொண்டாடப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 5 நாள் போர் நிறுத்தம் ஒன்றை அதிபர் அஷ்ரப் கானி அறிவித்திருந்தார். இதனை ஏற்ற தலிபான் அமைப்பும் 3 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில் இந்த போர் நிறுத்தம் முடிவடைந்து விட்டதால் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செவ்வாய் அன்று மீண்டும் . போர்க்களம் திரும்பினர். எனவே அரசு படைகளும் போர் நிறுத்தம் முடிந்து பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இனி ஈடுபடும் என அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ளார். அதன்படி தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தொடங்கி உள்ளனர்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அஷ்ரப் அமைதியை விரும்புவதை வெளிக்காட்டவே இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும் தலிபான் அமைப்பு விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் எனவும் தெரிவித்தார்.

Related posts: