பிரான்சில் தொடரும் பதற்றம் இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு; அவசரநிலை பிரகடனம்!

Friday, October 30th, 2020

பிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் மூவர் உயிரிழந்தும் பலர் காயமடைந்தும் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட் தாக்குதல் என அறிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நபர் துப்பாக்கியுடன் அவிங்கான் மாகாணத்தில் உள்ள மோண்ட்பவேட் என்ற நகரின் ஒரு தெருவில் சுற்றித்திரிந்ததையடுத்து அவர் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரே நாளில் பிரான்ஸில் இடம்பெற்றுள்ள இரண்டு பயங்கரவாத தாக்குதல் காரணமாக அந்நாட்டில் தற்போது பதற்றம் நிலவுகின்றது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெளியே ஒரு பாதுகாப்புக் காவலர் குத்தப்பட்டு காயமடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒருவர் ஒரு தேவாலயத்திற்கு அருகே கத்தியுடனும், மற்றொருவர் வாளுடன் ரயிலில் ஏற முற்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை மையமாக வைத்து அந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
பிரான்ஸில் அண்மைக்காலமாக பதிவாகிவரும் பயங்கரவாத சம்பவங்களை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வழிபாட்டுத்தளங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நலன்கருதி நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் இரு மடங்காக குவிக்கப்பட்டுள்ளனர்

Related posts: