ஐ.எஸ் அமைப்பை விரட்ட துருக்கியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம்!

Thursday, September 8th, 2016

தீவிரவாதிகள் வலுவாக உள்ள சிரியாவின் ராக்கா நகரத்திலிருந்து ஐ.எஸ் அமைப்பை வெளியேற்ற துருக்கியுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க அமெரிக்கா விரும்புவதாக துருக்கி தெரிவித்துள்ளது.

இந்த கூட்டு நடவடிக்கை ஆலோசனையை அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்ததாக தெரிவித்த துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான், இதற்கு ஒத்துழைப்பு தர துருக்கி தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார். ”நம் இரு நாட்டு படையினரும் இணைந்து பணியாற்றலாம்” என்று அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மேலும் விவாதங்கள் தேவைப்படுகிறது என்றும் எர்துவான் கூறியுள்ளார்.

ஏற்கனவே, வடக்கு சிரியாவில் ஐ.எஸ். அமைப்பு மற்றும் குர்திய படைகள் ஆகிய இரண்டு தரப்பினரையும் எதிர்த்து பெரிய ராணுவ நடவடிக்கையில் துருக்கி ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

150213110439_erdogan_obama_624x351_reuters

Related posts: