வடக்கின் முக்கிய மாவட்டமான கிளிநொச்சியில் தீயணைப்புப் படை!

Sunday, April 8th, 2018

வடக்கின் முக்கிய மாவட்டமான கிளிநொச்சியில் நிரந்தர தீயணைப்புப் படை மற்றும் அதற்கான வாகன வசதிகள் இல்லாதிருந்த நிலையில் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த மாவட்டத்திற்கு நிரந்தரமான தீயணைப்புப் படை நிறுவப்பட்டுவரும் நிலையில் விரைவில் இதற்கான வேலைகள் பூர்த்தியடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த தீயணைப்புப் படைக்கான கட்டடம் கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தியில் அமைக்கப்படுவதுடன் தேவையான பவுசர்கள் தீயணைப்பு இயந்திரங்கள் என்பன வெளிநாட்டில்இருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான வசதிகள் இல்லாததால் அங்கிருந்த சுமார் 125 கடைகளை எரித்து நாசமாகியிருந்தன.

இதனையடுத்தே கிளிநொச்சி மாவட்டத்திற்கென ஒரு தீயணைப்புப் படை வேண்டும் என்பது தொடர்பில் பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: