பங்களாதேஷ் தொழிற்சலையில் பாரிய தீ – பலர் உடல்கருகிப் பலி!

Saturday, July 10th, 2021

பங்களாதேஷிலுள்ள உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 50 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டாக்காவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ருப்கன்ஜி நகரில் உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

வியாழக்கிழமை மூண்ட தீயை 24 மணித்தியாலத்தின் பின்னரும் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் முதலில் மூவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தனர் எனினும் தீயணைப்பு படைவீரர்கள் மேல்தளங்களிற்கு சென்றதை தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்தது.

தீ மூண்டவேளை உள்ளே சிக்குண்ட தொழிலாளர்கள் பலரின் உடல்களை தீயணைப்பு படை வீரர்கள் மேல் தளத்திலிருந்து அகற்றியுள்ளனர்.

வீதிகளில் குழுமியிருந்த பெருமளவு மக்களின் கதறல்களிற்கு மத்தியில் கருகிய உடல்கள் அம்புலன்சில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

சேமித்து வைக்கப்பட்டிருந்த இரசாயனங்கள் எரிபொருட்கள் காரணமாகவே இந்த தீ மூண்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் மேல் மாடியிலிருந்து குதித்துள்ளனர்.

தீ மூண்ட வேளை தொழிற்சாலையின்மேல் தளத்தில் பலர் காணப்பட்டனர் என உயிர் தப்பிய தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தளத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன உள்ளே 48 பேர் இருந்தனர் எனஏனையவர்கள் தெரிவிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: