பங்களாதேஷ் செல்லும் ரோஹிங்கியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, October 17th, 2017

வன்செயல் காரணமாக மியன்மாரில் இருந்து பங்களாதேஷ் செல்லும்  ரோஹிங்கிய ஏதிலிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

இதுவரை ஐந்து லட்சத்து 37 ஆயிரம் ஏதிலிகள் மியன்மாரை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் 27 ஆயிரத்து 825 குடும்பங்களைச் சேர்ந்த ஏதிலிகள் பங்களாதேஷ் பிரவேசித்திருப்பதாக பங்களாதேஷ் அரசாங்கம் பதிவு செய்துள்ளது.

புதிதாக சென்றுள்ள ஏதிலிகளுக்கு அடிப்படை வசதிளை செய்து கொடுப்பதற்கு உணவுஇ மருத்துவ சேவைஇ மற்றும் தற்காலிக கூடாரங்கள் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளது

Related posts: