நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் மாயம்!

Sunday, June 18th, 2023

ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழையைத் தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம் என்றாலும் நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்களில் 25 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அவர்களை தேடும் பணி இடமபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: