தாக்குதலுக்கு தயாராக இருந்த 120 எரிவாயுகலன்கள் மீட்பு !

Monday, August 21st, 2017

ஸ்பெயினில் இடம்பெற்றிருந்த இரட்டை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் பதட்டத்தினை ஏற்படுத்தி இருக்க, தாக்குதலுக்கு தயாராக இருந்த 120 எரிவாயுக்கலன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை  அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஐவரில் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஒருவர் தொடர்ந்தும் தேடப்படும் நபராக இருக்கின்றார்.

சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் வீட்டினை சோதனை செய்ய காவல்துறையினர், 120 எரிவாயுகலன்களை அங்கு மீட்டுள்ளனர்.

பார்சலோனாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் தாக்குதல்களை மேற்கொள்ளும் நோக்கில், இந்த எரிவாயுக்கலன்கள் தயார்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தினை தொடர்ந்து பிரான்ஸ் – ஸ்பெயின் எல்லைப்பகுதி தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

Related posts: