முதல் ஜப்பான் தலைவராக அபே பேர்ல் ஹார்பர் விஜயம்!

Wednesday, December 7th, 2016

1941 ஆம் ஆண்டு ஜப்பான் இராணுவம் தாக்கிய அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் நினைவு மண்டபத்திற்கு முதல் ஜப்பானிய தலைவராக ஷின்சோ அபே விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஹவாயில் இருக்கும் பேர்ல் ஹார்பர் துறைமுகம் மீது 1941 ஆம் ஆண்டு ஜப்பானியப் படை நடத்திய தாக்குதலில் 2,300 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலே அமெரிக்காவை இரண்டாவது உலகப் போருக்கு இட்டுச் சென்றது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 27 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் அபே இங்கு செல்லவுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியடைய இரு தினங்கள் இருக்கும்போதே இந்த அறிவிப்பு வெளியானது. கடந்த மே மாதம் ஜப்பான் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 1945 இல் அமெரிக்க அணு குண்டு தாக்குதலில் சுமார் 150,000 பேர் கொல்லப்பட்ட ஹிரோஷிமா நகருக்கு முதல் அமெரிக்க தலைவராக விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் பேர்ல் ஹார்பர் நினைவிடத்தில் அபேவின் மனைவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

coltkn-12-07-fr-06163209838_5077541_06122016_mss_cmy

Related posts: