டிரம்பின் வருமானவரி தொடர்பான தகவல்களை வெளியிட்ட தொலைக்காட்சி மீது அதிபர் மாளிகை சாடல்!

கடந்த 2005-ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு செலுத்திய வருமானவரி விவர அறிக்கை என இரண்டு பக்கங்களை கொண்ட தகவல்களை அமெரிக்க தொலைக்காட்சி எம்.எஸ்.என்.பி.சி குழுமம் வெளியிட்டுள்ளது.
தனக்கு இந்த விவரங்கள் பெயர் குறிப்பிடப்படாத நபரிடமிருந்து தபால் மூலம் கிடைத்ததாக, இது தொடர்பாக எம்.எஸ்.என்.பி.சி தொலைக்காட்சியில் பேட்டி அளித்த செய்தியாளராரான டேவிட் கே ஜான்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
150 மில்லியன் டாலர்களுக்கும் மேலான தனது வருமானத்தின் மீது வருமான வரியாக 38 மில்லியன் டாலர்களை அதிபர் டிரம்ப் செலுத்தியதாக வெள்ளை மாளிகை அலுவலகம் இது தொடர்பாக பதிலளித்துள்ளது.
சட்டத்தை மீறி டிரம்பின் வருமான வரி விவரங்களை வெளியிட்டதாக எம்எஸ்என்பிசி தொலைக்காட்சி மீது அதிபர் அலுவலகம் மேலும் குற்றம்சாட்டியுள்ளது.
Related posts:
சீனாவை புரட்டிப்போட் வெள்ளம்: ஊகான் நகரம் பாதிப்பு!
இரண்டு வருடங்களில் முக்கிய ஏற்றுமதியாளராக மாறுவதுதான் தமது இலக்கு - கென்யா!
மணிப்பூரில் நிலச்சரிவு : 09 பேர் பலி
|
|