பெல்ஜியம் குண்டு வெடிப்பு தொடர்பாக 6 பேர் கைது!

Friday, March 25th, 2016

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் 22ஆம் திகதி ஜாவெண்டம் சர்வதேச விமான நிலையத்திலும், மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்திலும் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 31 எனவும், காயம் அடைந்தோர் எண்ணிக்கை சுமார் 300 எனவும், அவர்களில் 61 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும், பெல்ஜியம் சுகாதார மந்திரி மாகி டி பிளாக் நேற்று அறிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு உளவுத்துறையின்  தோல்வியே காரணம் என்று கடுமையாக குற்றம் சாட்டப்பட்டதால், பெல்ஜியம் நாட்டின் உள்துறை மற்றும் நீதி மந்திரி, தாக்குதலை தடுக்க தவறியதற்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்தார்.

ஆனால், இவரது பதவி விலகலை பெல்ஜிய பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஏற்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில், பிரசல்ஸ் தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதில் சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Related posts: