ஜேர்மனியில் பதறவைக்கும் கைது!

Wednesday, November 9th, 2016

ஜேர்மன் சக்-ஷான் நகரில் பொலிசார் சுற்றிவளைத்து பாரிய தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாகவே, இத்தேடுதல் வேட்டை இடம்பெற்றுள்ளது. இதன்போது அதிரடியாக 5 ஜிஹாடிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு இவர்களுக்கு எல்லாம் தலைவராக இருந்த நபரையும் ஜேர்மன் பொலிசர் கைதுசெய்துள்ளார்கள். இவர்கள் ஐயவரும், ஜேர்மனியில் உள்ள முஸ்லீம்களின் மனதை மாற்றி, அவர்களை மன மாற்றம் செய்து சிரியாவுக்கு அனுப்பி வந்துள்ளார்கள்.

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆள்சேர்க்கும் பணியில் இவர்கள் முற்று முழுதாக இறங்கி இருந்தார்கள். மேலும் ஜேர்மனியில் தாக்குதல் நடத்துவது தொடர்பாகவும் இவர்கள் சில திட்டங்களை தீட்டியிருந்த வேளையில், கைதாகியுள்ளார்கள். இதனூடாக நடக்க இருந்த பெரும் ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

seige

Related posts: