சோமாலியாவில் இராணுவ முகாம் மீது தாக்குதல்: 22 பேர் பலி!

Tuesday, July 12th, 2016

சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவுக்கு  தென்மேற்கே உள்ள இராணுவ  முகாம் மீது நேற்று அல்சபாப் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடும்நடத்தினர்.

குறித்த தாக்குதலில் 10 இராணுவ வீரர்களும் 12 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அரசுதரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் தாங்கள் நடத்திய இந்த தாக்குதலில் 30 வீரர்கள் பலியானதாக அல்-சபாப் அமைப்பு தெரிவித்தது.    எனினும் தங்கள் தரப்பில் பலியானோர் குறித்து  அவர்கள் வெளியிடவில்லை.
இராணுவத்திற்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரமாக  சண்டை நடந்தது. இறுதியில் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி  சென்றமை குறிப்பிடத்தக்கது.

362A491000000578-3683989-image-m-86_1468252928040

362A4EC600000578-3683989-image-m-82_1468252887247

 

Related posts: