அரியணை ஏறினார் மலேசியாவின் புதிய அரசர்!

Thursday, December 15th, 2016

மலேசியாவின் புதிய அரசராக சுல்தான் முகமது (47) அரியணை ஏறியுள்ளார். தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் அவருக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து முடி சூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

பின்னர், பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்னும் முறையில் அளிக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார். தற்போதைய மலேசிய அரச வம்சம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து கோலோச்சி வருகிறது.

ஆயினும் நவீன காலத்தில் அதன் செயல் முறைகளில் சில மாற்றங்கள் வந்துள்ளன. எனினும், மன்னரே மலேசிய பாதுகாப்புப் படைகளின் தலைவராக உள்ளார். மலேசியாவின் ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த அரச வம்சத்தினர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த நாட்டின் அரசராக சுழற்சி முறையில் பொறுப்பு வகிக்கின்றனர்.

அங்கு சுழற்சி முறையிலான பொறுப்பேற்பு 1957 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் அரசராக இருந்த சுல்தான் அப்துல் ஹாலிம் முவத்ஸாம் ஷா (89), சுழற்சி முறையில் இரு முறை மலேசிய மன்னராக முடி சூட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

malaysia (1)

Related posts: