சீனா மின் உற்பத்தி ஆலை விபத்தில் இறந்தவர்களது எண்ணிக்கை அதிகரிப்பு!

Sunday, August 14th, 2016

கடந்த வியாழக்கிழமை சீனாவில் மின் உற்பத்தி ஆலையில் நடைபெற்ற வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

சீனாவின் மத்திய மாகாணமான ஹுபெயில் உள்ள டங்யாங் நகரில் இருந்த ஒரு நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. உயர் அழுத்த நீராவி குழாய் உடைந்ததால் பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சுரங்கங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்த அரசாங்கம் வலியுறுத்தியும் இதுபோன்ற தொழிற்சாலை விபத்துகள் சீனாவில் வழக்கமாக நடந்து வருகிறது.

Related posts: