சீனாவுக்கான விமான சேவை நிறுத்தம் – பிரித்தானியா!

Thursday, January 30th, 2020

சீனாவுக்கான விமான சேவையை பிரித்தானியா இரத்து செய்துள்ளது. அத்துடன் சீனாவிலிருந்து பிரித்தானியாவுக்காகன நேரடி விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் வெளிவிவகார அலுவலகம் விடுத்த அறிவுறுத்தலை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏயர்வேர்ஸ் அறிவித்துள்ளது.

Related posts: