சட்டசபையில் வரலாறு படைத்த 170 கோடீஸ்வரர்!

Sunday, May 22nd, 2016

தமி­ழக சட்­ட­ச­பையில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்­வ­ரர்கள். இந்த 170 கோடீஸ்­வர எம்.எல்.ஏ.க்களில் நாங்­கு­நேரி தொகுதி காங்­கிரஸ் எம்.எல்.ஏ. ஹெச்.வசந்­த­குமார் முதல் இடத்தை பெற்றுள்ளார். முதல்வர் ஜெய­ல­லிதா மூன்­றா­மி­டத்­திலும், தி.மு.க. தலைவர் கரு­ணா­நிதி நான்காம் இடத்­திலும் உள்ளனர்.

தமி­ழக சட்­ட­ச­பைக்கு நடை­பெற்ற தேர்­தலில், இந்த முறை அதிக அளவில் கோடீஸ்­வ­ர வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், அர­சியல் கட்­சிகள் சார்பில் போட்­டி­யிட மனு செய்த 997 வேட்­பா­ளர்­களில் 553 பேர் கோடீஸ்வ­ரர்கள் என்று தெரி­ய­வந்­துள்­ளது

தஞ்­சாவூர், அர­வக்­கு­றிச்சி தவிர 232 தொகு­தி­களில் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் முடிந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் அறி­விக்­கப்­பட்­டு­விட்­டனர். தமி­ழக மக்கள் புதி­தாக தேர்ந்­தெ­டுத்­துள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 பேர் கோடீஸ்வர்களாக உள்­ளனர்

மொத்தம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 70 சத­வீதமானோர் கோடீஸ்­வ­ரர்­க­ளாக உள்­ளனர். தமிழக சட்­ட­சபை வரலாற்றிலேயே அதிக எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்­வ­ரர்­க­ளாக இருப்­பது இதுவே முதல்­மு­றை­யாகும்

அதிக கோடீஸ்­வர எம்.எல்.ஏ.க்களை கொண்­டுள்ள பணக்­கார கட்சி என்ற முத­லிட அந்தஸ்தை அ.தி.மு.க. தட்டிச் சென்­றுள்­ளது. வெற்றி பெற்­றுள்ள அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்களில் 91 பேர் கோடீஸ்­வ­ரர்கள்

இந்த 170 கோடீஸ்­வர எம்.எல்.ஏ.க்களில் முதல் இடத்தை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹெச்.வசந்தகுமார் பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 337 கோடி ரூபாவாகும்.

 

 

Related posts: