கொரோனா தொற்று: அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தையும் கடந்தது!

Wednesday, April 22nd, 2020

நிரந்தரமாக குடியுரமை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடு கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்துள்ள அமெரிக்க மக்களை பாதுகாக்கும் எனவும் அவர் தமது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் தற்காலிக சேவைகள் அல்லது பணிகளுக்காக அமெரிக்கா வருபவர்களுக்கு இந்த நடவடிக்கை பொறுந்தாது எனவும்  குறதித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 776 பேர் உயிரிழந்துள்ளதோடு தொற்று உறுதியான 25 ஆயிரத்து 593 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

இதனடிப்படையில் அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று காரணமாக இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளதோடு 8 லட்சத்து 18 ஆயிரத்து 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 828 பேர் உயிரிழந்ததை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரித்தானியாவில் ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 44 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் ஒரு  இலட்சத்து 77 ஆயிரத்து 413 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 25  இலட்சத்து 54 ஆயிரத்து 968 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் 6 இலட்சத்து 90 ஆயிரத்து 39 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: