குற்றச் செயல்களை தடுக்க பிரித்தானிய பொலிஸார் தயார்!

Tuesday, February 14th, 2017

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என எதிர்வுகூறப்பட்டதை தொடர்ந்து அவற்றை எதிர்கொள்ளும் வகையில் பிரித்தானிய பொலிஸார் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் நடத்தப்பட்ட குடியொப்ப வாக்கெடுப்பின் மூலமான கருத்துக்கணிப்பின் போது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலக வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து இன மற்றும் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் பாதிப்படையக்கூடிய சமூகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்ட அமுலாக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல் தெரியும் பட்சத்தில் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

093-720x450

Related posts: