Aspirin மற்றும் Ibuprofen மாத்திரைகள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

Monday, February 6th, 2017

உடல் பாகங்களில் ஏற்படும் அனேகமான வலிகளுக்கு நிவாரணியாக அனைவரும் பயன்படுத்தும் மாத்திரைகளாக Aspirin மற்றும் Ibuprofen என்பன காணப்படுகின்றன.

இவற்றில் Aspirin மாத்திரையே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறிருக்கையில் இவ்விரு மாத்திரைகளும் முதுகு வலியை போக்குவதற்கு ஓருபோதும் உதவி புரிவதில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Nonsteroidal Anti-Inflammatory Drugs என அழைக்கப்படும் Aspirin மற்றும் Ibuprofen ஆகிய மாத்திரைகள் சிறிய அளவிலேயே முதுகு வலியை குணப்படுத்தக்கூடியது எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள George Institute for Global Health நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில் முதுகு வலி உடைய 6,065 நபர்கள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

முள்ளந்தண்டில் ஏற்படும் பாதிப்பினால் ஏற்படக்கூடிய முதுகு வலியானது ஒப்பீட்டளவில் ஏனைய வலிகளை விட நீண்ட காலம் நீடித்திருப்பதே பிரதான காரணமாகும்.

நீண்ட கால வலிகளுக்கு Aspirin மற்றும் Ibuprofen ஆகிய மாத்திரைகள் முழுமையான நிவாரணத்தை தருவதில்லை.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: