காப்டிக் தேவாலயங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 45 பேர் பலி!

Monday, April 10th, 2017

எகிப்தில் உள்ள காப்டிக் தேவாலயங்களில் நடைபெற்ற இரு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் வெளியா கியுள்ளன.

குருத்தோலை ஞாயிறு திருப்பலியை அலெக்ஸாண்ட்ரியா பேராலயத்தின் தலைமை பேராயர் தலைமைத்தாங்கி நடத்திக் கொண்டிருந்த போது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னிடம் இருந்த கருவியை வெடிக்கச் செய்தார்.

பேராயருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை. ஆனால், 16 பேர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

Related posts: