கடும் மழை – ஜப்பானின் தென்மேற்கு பகுதி மக்கள் பரிதவிப்பு!

Thursday, July 4th, 2019

ஜப்பானின் தென்மேற்கு பிராந்தியத்தில் கடும் மழை பெய்து வருவதால், ககோஷிமா நகரில் உள்ள 6 லட்சம் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் கியூஷு தீவில் கடும் மழை நீடிக்கும் என்றும், மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வியாழக்கிழமை வரை கடும் மழை தீவிரமாக இருக்கும் என்றும், கியூஷு உள்ளிட்ட சில பகுதிகளில் மணிக்கு 80 மிமீ வரை மழை பெய்யலாம் என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: