எம்.எச்.370  விமானத்தின் சிதைவுகள் மடகஸ்காரில் மீட்பு?

Saturday, June 11th, 2016

காணாமல்போன மலேசிய எம்.எச்.370  விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவரால் மடகஸ்காரில் அந்த விமானத்தினுடையவை என நம்பப்படும் புதிய சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிளைன் கிப்ஸன் என்ற மேற்படி நபர் ஏற்கனவே அந்த விமானத்தினுடையவை என கருதப்படும் சிதைவுகளை மொஸாம்பிக்கில் கண்டுபிடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது வடகிழக்கு  மடகஸ்காரில் நொஸி பொரஹா தீவிலுள்ள றியக் கடற்கரையில் புதிய சிதைவுகளை கண்டுபிடித்துள்ளார்.

அவர் அந்த சிதைவுகள் தொடர்பான  புகைப்படங்களை காணாமல்போன விமானம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மலேசிய எம்.எச்.370  விமானம் 2014  ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி கோலாலம்பூர் நகரிலிருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239  பேருடன் பயணித்த வேளை காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது

mal1

mal2

mal3

mal4

mal5

Related posts: