ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக பிடியாணைபிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

Saturday, March 18th, 2023

யுக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

யுக்ரைனில் தனது படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு புடினே பொறுப்பு என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த வருடத்தில் புட்டினின் வீரர்கள் அடுக்குமாடி கட்டிடங்கள் மீது ஏவுகணைகளை வீசியதையும் பொதுமக்களை சுட்டுக் கொல்லும் முன் சித்திரவதை செய்வதையும் பெண்களையும் சிறுமிகளையும் திட்டமிட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதையும் உலகம் திகிலுடன் பார்த்தது.

ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட்ட பலரை ரஷ்ய வீரர்கள் தூக்கிலிட்டனர். அவர்களின் உடல்கள் தரையில் தோண்டப்பட்ட ஆழமான குழிகளில் வீசப்பட்டன. இதுவரை குறைந்தது 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட எட்டு மில்லியன் யுக்ரேனியர்கள் ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: