உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Monday, July 8th, 2019

யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்து, அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதற்கு, ஈரான் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் 3.6 சதவீதத்தை தாண்டும் என ஈரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ட்விட்டரில் பதிவிட்டதாவது, ஈரானின் அணுசக்தி திட்டத்தின் சமீபத்திய விரிவாக்கம் மேலும் தனிமைப்படுத்தப்படுவதற்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் வழிவகுக்கும் எனறு எச்சரித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டத்திற்காக. செறிவூட்டல் இல்லாத நீண்டகால தரத்தை, உலக நாடுகள் மீட்டெடுக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதங்கள் ஏந்தியிருப்பது உலகிற்கு இன்னும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என பாம்பியோ எச்சரித்துள்ளார்.

ஆனால், 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டே அமெரிக்கா பின்வாங்கியது. இதனையடுத்தே இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: