யுத்த நிறுத்தத்தை அறிவித்தார் பிலிப்பைன்ஸின் புதிய ஜனாதிபதி!

Tuesday, July 26th, 2016

பிலிப்பைன்சில் இயங்கிவரும் கம்யூனிஸ்ட் கொரில்லா படையினருடன்,தன்னிச்சையான யுத்த நிறுத்தத்தை அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே அறிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மணிலாவில் நடைபெற்ற நாட்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தில், தன் 6 ஆண்டுகால ஆட்சி முடிவதற்குமுன், நிரந்திர மற்றும் நீடித்திருக்கக்கூடிய அமைதியை ஏற்படுத்த வேண்டும் என உறுப்பினர்கள் மத்தியில் பேசினார். கடந்த மாதம் தான் அவருடைய ஆட்சிக் காலம் தொடங்கி உள்ளது.

பிலிப்பைன்சின் தெற்கில் உள்ள கம்யூனிஸ்ட் புதிய மக்கள் கொரில்லா படையினர் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் இருவரையும் தங்கள் ஆயுதங்களை கீழே போடும்படி ரோட்ரிகோ டுடெர்டோ கூறியுள்ளார்.

Related posts: