ஐரோப்பிய நாடுகளில் கடும்பனி – உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, January 12th, 2019

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பனிப்புயல் மற்றும் உறைபனி நிலைமைகளை தொடர்ந்து அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவுகின்றது. இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் பனி பொழிவின் அளவு 6 அடி வரை உயரும் என்று ஜேர்மனி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஜேர்மனி, ஒஸ்ரியா உள்ளிட்ட நாடுகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் தேங்கியுள்ள பனியை அகற்றுவதற்கு இராணுவத்தினரை ஈடுபடுத்த ஜேர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடந்தவாரம் முதல் கடும் பனிப்பொழிவு தொடர்ந்துவரும் ஓஸ்ரியாவில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். சுவிடனின் வடபகுதியிலும் பனிப்பொழிவும் கடுமையான குளிர்காற்றும் வீசுவதால் பெரும் பாதிப்புக்கள் தொடர்கின்றன.


2020 க்குள் ராணுவத்தை நவீனமயமாக்க சீனா திட்டம்
குடியேற்றவாசிகள் தொடர்பில் ஸ்கொட்லாந்துக்கென தனியான உடன்படிக்கை!
டிரம்பின் வருமானவரி தொடர்பான தகவல்களை வெளியிட்ட தொலைக்காட்சி மீது அதிபர் மாளிகை சாடல்!
சிரியாவின்  நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைக் தாக்குதல்: 25 பேர் பலி!
ஜெயலலிதாவின் உயிரை பறித்த ‘பழச்சாறா"?…