எந்நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் -வடகொரியா !

Saturday, May 26th, 2018

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-வுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென அறிவித்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-வுடனான பேச்சுவார்த்தை நடத்துவதை தான் ஆர்வமுடன் எதிர்நோக்கி இருந்ததாகவும ஆனால், அண்மையில் வெளியான உங்களது அறிவிப்பில் பகைமை வெளிப்பட்டதால் மிகப்பெரிய அளவில் ஆத்திரமும் வெளிப்பட்டது. இதை அடிப்படையாக வைத்து பார்க்கையில், உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இது உகந்த நேரம் அல்ல என்று நினைத்தும், இரு நாடுகள் நலன் கருதி, சிங்கப்பூரில் உங்களுடன் ஜூன் 12இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்த டிரம், “அணுஆயுத திறன் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்; ஆனால் எங்கள் நாட்டிடம் மிகப்பெரிய எண்ணிக்கையில் அணுஆயுதங்கள் இருக்கின்றன. அந்த ஆயுதங்கள் அனைத்தும் சக்திவாய்ந்தவை. அவற்றை (வடகொரியாவுக்கு எதிராக) பயன்படுத்தும் வாய்ப்பு அமெரிக்காவுக்கு வந்துவிடக் கூடாது என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்திருந்தார்.

மேலும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-வுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், வடகொரியாவால் நீண்டகாலம் பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்கள் 3 பேரை விடுதலை செய்ததற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், கிம் ஜாங் உன்-வுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வடகொரிய வெளியுறவு துறை அமைச்சர் கிம் கை குவான் கூறுகையில், வடகொரிய அதிபருடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க  நாங்கள் தயார் என தெரிவித்துள்ளார்.

Related posts: